TamilsGuide

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்

'16 வயதினிலே' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாரதி ராஜா. அவரது முதல் படத்திலேயே ரஜினி, கமல், ஸ்ரீதேவி என முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து படத்தை இயக்கினார்.

தொடர்ந்து பல படங்களை இயக்கிய பாரதிராஜா ராதிகா, ராதா, கார்த்திக் உட்பட பல முன்னணி நடிகர், நடிகைகளை அறிமுகம் செய்த பெருமை இவரை சாரும்.

முதல் மரியாதை, கிழக்கே போகும் ரெயில், அலைகள் ஓய்வதில்லை உட்பட பல வெற்றி படங்களை இயக்கியிருக்கிறார். இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் படங்களில் நடித்துள்ளார்.

திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷிற்கு தாத்தா கேரக்டரில் நடித்திருந்தார். தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

அவரது ஒரே மகனும் நடிகரும் இயக்குனருமான மனோஜ் பாரதிராஜா உயிரிழந்தது பாரதிராஜாவை மிகவும் நிலைகுலைய செய்தது.

மகனின் இழப்பிலிருந்து மீள முடியாமல் தவித்து வந்த அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதற்கிடையே மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டது. ராதிகா உள்ளிட்டோர் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தனர்.

,இதற்கிடையே பாரதிராஜாவுக்கு மீண்டும் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பாரதிராஜா (84) சிகிச்சை பலனின்றி காலமானார். நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இயக்குநரும் நடிகருமான பாரதிராஜாவின் உயிர் பிரிந்தது. அவரது மறைவையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a comment

Comment