கந்தான பகுதியில் இன்று காலை (09) முச்சக்கர வண்டியொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இன்று காலை சுமார் 7.10 மணியளவில், கப்புவத்தைக்கும் கந்தானைக்கும் இடையிலான ரயில் கடவை ஒன்றிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
ரயில் வருவதற்கான எச்சரிக்கை சமிக்ஞைகள் மணிகள் ஒலித்துக் கொண்டிருந்த போதிலும், குறித்த முச்சக்கடி வண்டி ரயில் கடவையை கடக்க முற்பட்டமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தின் விளைவாக, மூன்று சக்கர வாகன சாரதியும், அந்த வாகனத்தில் பயணித்த ஜா-ஏலாவைச் சேர்ந்த 75 வயது மூதாட்டியும் உயிரிழந்தனர்.
முச்சக்கர வண்டி சாரதியின் அடையாளம் இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை.
இந்தச் சம்பவம் குறித்து கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


