முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் அவர் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (09) தீர்ப்பளித்துள்ளது.
2006-ஆம் ஆண்டில் அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக சரண குணவர்தன பதவி வகித்த காலம் தொடர்பான வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை, மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹைல் தீர்ப்பை வழங்கி அறிவித்தார்.
சரண குணவர்தன அந்த நிறுவனத்திற்காக வாகனங்களை வாடகை அடிப்படையில் பெற்று, அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதன் மூலம் ஊழல் குற்றத்தைச் செய்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
தண்டனை வழங்குவது தொடர்பாக நீதிமன்றத்தில் வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
மேலும் தண்டனையை நீதிமன்றமே நிர்ணயிக்கும்.


