தலவத்துகொட சந்தி அருகில் அமைந்துள்ள உணவகமொன்றில் இன்று (09) காலை இடம்பெற்ற தீ விபத்தில் காயமடைந்த மூவரும் உயிரிழந்துள்ளனர்.
தீ விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீப்பரவலைகட்டுக்குள் கொண்டுவர ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டை மாநகர சபையிலிருந்து மூன்று தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.
முதற்கட்ட விசாரணையில், எரிவாயு கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது, எனினும், சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
தலங்கம பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணை தொடங்கியுள்ளனர்.


