TamilsGuide

மீண்டும் சரிவை நோக்கி இலங்கை ரூபா- நாணய சந்தையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன்படி, மத்திய வங்கி இன்று (09) வெளியிட்டுள்ள தினசரி நாணய மாற்று விகித அறிவிப்பின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 332.38 ரூபாவாகவும், விற்பனை விலை 342.08 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கடந்த (03) புதன்கிழமைக்குப் பின்னரான ஒரு வார காலப்பகுதியில், இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் அதிகூடிய பெறுமதியை எட்டியிருப்பது இன்றைய தினமே ஆகும்.
 

Leave a comment

Comment