TamilsGuide

உலகை அதிர வைக்கும் வடகொரிய ஜனாதிபதியின் புதிய உத்தரவு - 5 ஆண்டுகளில் ஏற்படவுள்ள மாற்றம்

வடகொரியவில் அடுத்த 5 ஆண்டுகளில் ஏவுகணைகளின் உற்பத்தியை 2.5 மடங்கு அதிகரிக்க ஜனாதிபதி கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் வடகொரியாவின் அணுசக்திப் பொருட்களின் உற்பத்தித் திறன் இருமடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சர்வதேச தடைகளையும் மீறி வடகொரியா தனது அணு ஆயுதங்களுக்கான எரிபொருள் மற்றும் பிறபொருட்களை உற்பத்தி செய்வதற்கான புதிய ஆலையை அந்நாட்டு அரசு அண்மையில் திறந்துள்ளதோடு தனது அணு ஆயுத உற்பத்தியைத் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

மேலும் இராணுவ தளவாட உற்பத்தி நிலவரங்களை கிம் ஜாங் உன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டபோது, அந்நாட்டின் சக்திவாய்ந்த HWASONG-11 ரக ஏவுகணை உற்பத்திப் பிரிவின் படங்கள் வெளிப்படையாக காண்பிக்கப்படுவது சர்வதேச அளவில் உற்று நோக்கப்படுகின்றன.

இதேவேளை மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் நீடித்து வரும் தற்போதைய சூழலில் வடகொரியாவின் இந்த அதிரடி நடவடிக்கை உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  
 

Leave a comment

Comment