TamilsGuide

சலே சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாக ஐ.நாவிற்கு அறிக்கை

தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானழ சுரேஷ் சலே சித்திரவரைக்கு உட்படுத்தப்படுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

சலே, சிறைச்சாலைக்குள் நடத்தப்படும் கொடூரமான மற்றும் மனிதநேயமற்ற சித்திரவதைகள் குறித்த விவகாரம் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளுக்கு எதிரான விசேட தூதுவரிடம் சமர்ப்பிப்பதற்கான விசேட அறிக்கை ஒன்று தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐ.நா விசேட தூதுவரிடம் இந்த சித்திரவதை அறிக்கை நேரடியாகக் கையளிக்கப்படவுள்ளதாக கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

சுரேஷ் சலேவுக்கு சிறைக்குள் விடுக்கப்படும் சித்திரவதைகள் மற்றும் அத்துமீறல்கள் அனைத்தும் ஆதாரமற்றவை அல்ல என தெரிவித்துள்ளார்.

கோட்டை நீதவானிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 25 பக்கங்களைக் கொண்ட சட்ட மருத்துவ அறிக்கை மற்றும் சலேவின் குடும்ப உறுப்பினர்கள் வழங்கிய மிகத் துல்லியமான தகவல்களின் அடிப்படையிலேயே இந்த ஐ.நா அறிக்கை வடிவமக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சுரேஷ் சலேவுக்கு விசேடமாக எந்தவொரு தொந்தரவும் செய்யப்படவில்லை எனவும், ஏனைய கைதிகளைப் போன்றுதான் அவரும் நடத்தப்படுகிறார் எனவும் பொாலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்ட விளக்க அறிக்கையை கம்மன்பில கடுமையாக சாடியுள்ளார்.

தம் மீதான பொலிஸாரின் குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், சலே சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாக தான் வெளியிட்ட தகவல்கள் பொய்யானவை என்றால், தனக்கு எதிராக உடனடியாக வழக்கு தொடருமாறு பொலிஸாருக்கு பகிரங்க சவால் விடுப்பதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

சுரேஷ் சலேவுக்கு சிறைக்குள் நடக்கும் இந்த அநீதிகள் குறித்து ஏற்கனவே மேன்முறையீட்டு நீதிமன்றம், நீதவான் நீதிமன்றம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றிற்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, அடுத்தகட்டமாக ஐ.நா சபைக்கு இந்த அறிக்கை அனுப்பப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a comment

Comment