TamilsGuide

Train படம் குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்

பிரபல இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் ‘ட்ரெயின்’. ஸ்ருதி ஹாசன், நாசர், நரேன், கே.எஸ். ரவிக்குமார் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். ‘ட்ரெயின்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், படம் ரிலீஸ் தேதி குறித்து அறிவிக்கப்படாமல் உள்ளது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

‘ட்ரெயின்’ படத்தின் பணிகள் நிறைவடைந்துவிட்டன. இப்படம் இரண்டரை மணி நேரம் ஓடும் ஒரு ரெயிலைச் சார்ந்த கதை என்பதால், அதற்கான CGI பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்ததால் வெளியீடு தாமதமானது. படத்தை வெளியிட ஒரு நல்ல தேதியைத் தேடிக்கொண்டிருக்கிறோம்.

இது விஜய்சேதுபதியின் திரைப்பயணத்திலேயே மிகச்சிறந்த அதிரடித் திரைப்படங்களில் (action movies) ஒன்றாக அமையும். மிகுந்த விறுவிறுப்பும் பரபரப்பும் நிறைந்ததாக இருக்கும். இதில் இடம்பெறும் சண்டைக் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் இருக்கும். விஜய் சேதுபதி அத்தகைய சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளார். இப்படம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை ரசிகர்களுக்குக் காட்டும் வகையில், 'மேக்கிங்' (making) வீடியோவையும் படத்தையும் வெளியிடுவோம் என்றார். 
 

Leave a comment

Comment