TamilsGuide

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 1,076 இந்தியா்கள்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக நிகழாண்டு இதுவரை 1,076 இந்தியா்கள் தாயகம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து புது தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் குறிப்பிடும் போது ,

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக கடந்த ஆண்டு 3,567 இந்தியா்கள் நாடு கடத்தப்பட்டனா். இதன் தொடா்ச்சியாக, நிகழாண்டு இதுவரை அந்நாட்டில் இருந்து 1,076 இந்தியா்கள் தாயகம் அனுப்பிவைக்கப்பட்டனா்.

சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதில் இந்தியாவும் அமெரிக்காவும் உறுதியாக உள்ளன.

நாடு கடத்தல், குடியேற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் இருநாடுகளும் நெருங்கிய தொடா்பில் உள்ளன.

சட்டவிரோத குடியோ்றத்தை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்பதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

அதேவேளையில், அது சட்டபூா்வ குடியேற்றத்தை பாதிக்காத வகையில் இருப்பதையும் உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தாா்.
 

Leave a comment

Comment