TamilsGuide

ஈரான் போரை நிறுத்​தக் கோரி அமெரிக்க பாராளுமன்​றத்​தில் தீர்மானம்

ஈரான் போரை நிறுத்​தக் கோரி அமெரிக்க பாராளுமன்​றத்​தில் தீர்மானம் நிறைவேற்​றப்​பட்டுள்​ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்​வேறு கட்ட பேச்​சு​வார்த்​தைகளுக்​குப் பிறகு கடந்த ஏப்​ரல் 8ஆம் திகதி இருதரப்பு இடையே போர் நிறுத்​தம் அமலுக்கு வந்​தது.

எனினும் அமெரிக்கா​வும் ஈரானும் அவ்வப்போது போர் நிறுத்​தத்தை மீறி வரு​கின்​றன. இந்த சூழலில் ஈரான் போரை நிறுத்​தக் கோரி அமெரிக்கா பாராளுமன்றத்தின் பிரதி​நி​தி​கள் அவை​யில் ஐனநாயக கட்சி சார்​பில் தீர்மானம் கொண்டு வரப்​பட்​டது.

இந்த தீர்​மானத்​தின் மீது நேற்று முன்தினம் வாக்​கெடுப்பு நடத்தப்​பட்​டது. ஆதர​வாக 215 எம்.​பிக்​களும், எதி​ராக 208 எம்.பிக்​களும் வாக்களித்​தனர். பெரும்​பான்மை எம்.பிக்களின் ஆதர​வால் தீர்​மானம் நிறைவேற்றப்பட்டது.

குறிப்​பாக ஆளும் குடியரசு கட்​சியை சேர்ந்த 4 எம்​.பிக்​கள் தீர்​மானத்​துக்கு ஆதரவாக வாக்​களித்துள்ளனர். இந்த தீர்​மானத்​தின் மீது செனட் அவை​யில் விரை​வில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

மொத்​த​முள்ள 100 எம்​.பிக்களில் ஆளும் குடியரசு கட்சிக்கு 53 எம்.​பிக்​கள் உள்​ளனர். ஜனநாயக கட்​சிக்கு 45 எம்.​பிக்​கள் மட்டுமே உள்​ளனர். பிரதிநிதிகள் அவை போன்று செனட் அவை​யிலும் ஆளும் குடியரசு கட்​சியை சேர்ந்த சில எம்.​பிக்​கள் தீர்​மானத்​துக்கு ஆதரவு அளிக்​கக்​கூடும் என்று கூறப்​படு​கின்றது.

ஒரு​வேளை செனட் அவை​யில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டாலும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சிறப்பு அதி​காரத்தைப் பயன்படுத்தி தீர்​மானத்தை இரத்து செய்ய முடி​யும்.

ஜனாதிபதி ட்ரம்ப் நிருபர்​களிடம், “அமெரிக்​கா, ஈரான் இடையி​லான பேச்​சு​வார்த்தை தொடர்ந்து நடை​பெற்று வருகின்றது.விரைவில் ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும்” என்றார்.

அதேசமயம் ஈரான் வெளி​யுறவுத் துறை அமைச்​சர் அப்​பாஸ் அராக்சி கூறும்​போது, “லெப​னான் மீதான தாக்​குதல் காரண​மாக அமெரிக்​கா, ஈரான் இடையிலான பேச்​சு​வார்த்தை தடைபட்டுள்​ளது. லெபனான் மீதான தாக்குதலை நிறுத்தினால் மட்​டுமே பேச்​சு​வார்த்தை தொடரும்” என குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment