TamilsGuide

7 நாட்களில் பிளாஸ்ட் திரைப்படம் செய்துள்ள வசூல்.. 

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால் கண்டிப்பாக அது ஹிட் தான் என தொடர்ந்து நிரூபித்து வருகிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளில் வெளியான லவ் டுடே, கான்ஜுரிங் கண்ணப்பன், தி கோட், டிராகன் என தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது பிளாஸ்ட் திரைப்படமும் இணைந்துள்ளது. ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் பிளாஸ்ட். இப்படத்தில் அபிராமி மற்றும் ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் நடித்திருந்தனர்.

கடந்த வாரம் திரைக்கு வந்த பிளாஸ்ட் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் வசூலில் முதல் நாளில் இருந்த பட்டையை கிளப்பி வருகிறது.

இந்த நிலையில், 7 நாட்களில் பிளாஸ்ட் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 7 நாட்களில் உலகளவில் ரூ. 39 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வாரத்தின் இறுதிக்குள் ரூ. 50 கோடியை தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Leave a comment

Comment