TamilsGuide

முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்திய இயக்குநர், நடிகர் பார்த்திபன்

தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் பார்த்திபன். இவர் திரைத்துறையில் வித்தியாசமான முயற்சிகளுக்கு பெயர் பெற்றவர். தனது திரைப்படங்களில் தொடர்ச்சியாக புதிய முயற்சிகளை செய்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் பார்த்திபன் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகராக இருந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய்க்கு திரைத்துறை சார்ந்த பலரும் நேரிலும், சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட பார்த்திபன் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
 

Leave a comment

Comment