TamilsGuide

நான் நடிக்க வந்து 25 வருஷம் ஆச்சா? புலம்பிய சிவாஜி - யுவன் நிகழ்ச்சியில் இளையராஜா உடைத்த உண்மை

1997-ம் ஆண்டு, சரத்குமார் பார்த்திபன் நடிப்பில் வெளியான அரவிந்தன் படத்தின் மூலம் தனது 18 வயதில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாரளாக அறிமுகமானார்.

தென்னிந்திய சினிமாவில் பல சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்து முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் யுவன் சங்கர் ராஜா, தனது 18 வயதில் இசையமைப்பாளராக அறிமுகமாகி 25 ஆண்டுகளை கடந்த நிலையில், இதற்காக நடத்தப்பட்ட ஒரு விழாவில், இளையராஜா சிவாஜி குறித்து ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.

70-களின் இறுதியில் தொடங்கி இன்றுவரை தமிழ் சினிமாவில் இசையில் ஆதிக்கம் செலுத்தி வருபவர் இளையராஜா. அன்னக்கிளி படம் தொடங்கி அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், ஓடாத கதையையும் தனது இசையால் ஒட வைப்பார், இளையராஜா இசை இருந்தாலும் போதும் படம் ஹிட்டாகிவிடும் என்ற நிலை இருந்தது. அதற்கு ஏற்றார்போல், தனது பாடல்கள் மூலமாகவே பல படங்களை ஓட வைத்த பெருமை இளையராஜாவுக்கு உண்டு.

தற்போது 80 வயதை கடந்தவராக இருந்தாலும், இன்றைக்கும் இளம் இசையமைப்பாளர்களுக்கு போட்டியாக வலம் வரும் இளையாஜா, பாடல் காப்புரிமை விவகாரத்தில் கண்டிப்புடன் இருந்து வருகிறார். தனது பாடல்களை மற்றவர்கள் பயன்படுத்தும்போது அதற்கு காப்புரிமை கேட்கும் இளையராஜா, தனது மகன் போட்ட டியூனை தனது படத்தில் பயன்படுத்தியுள்ளார் என்பது ஆச்சரியமான ஒரு தகவல். இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா, பவதாரணி, யுவன் சங்கர் ராஜா என 3 பிள்ளைகள் உள்ளனர்.

இதில் கார்த்திக் ராஜா இசையமைப்பாரளராக இருந்தாலும், யுவன் அளவுக்கு அவருக்கு ரசிகர்கள் இல்லை என்று சொல்லலாம். 1997-ம் ஆண்டு, சரத்குமார் பார்த்திபன் நடிப்பில் வெளியான அரவிந்தன் படத்தின் மூலம் தனது 18 வயதில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாரளாக அறிமுகமானார். இவர் கடந்த 2022-ம் ஆண்டு திரையுலகில் தனது 25 ஆண்டுகளை நிறைவு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா சிவாஜி தன்னிடம் சொன்ன தகவல் ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, 1968-ல் நாங்கள் சென்னை வந்துவிட்டோம். அப்போது திருமணம் ஆகவில்லை. 1975-ல் முதல் படம் வேலை செய்ய தொடங்கிவிட்டேன். அதேசமயம் 1968-ல் நான் உதவியாளராக ஜி.கே.வெங்கடேஷிடம் பணியாற்ற தொடங்கிவிட்டேன். அதன்பிறகு இசையமைப்பாளராகவும் ஆகிவிட்டேன். அப்போது ஒருநாள் ரெக்கார்டிங் அட்டன் செய்வதற்காக சிவாஜி சார் வந்துவிட்டார். அன்று அவர் டேய் என்னடா, நேற்று தான் நான் வந்த மாதிரி இருக்கு, அதற்குள் 25 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று சொன்னார்.

மேலும், எனக்கு 25 வருஷம் சினிமாவில் சர்வீஸ் ஆகிவிட்டது என்று சொல்றாங்கடா, என்று சொல்லி ரொம்ப ஆச்சரியமாக பேசினார். அந்த மாதிரி ஆச்சரியமாக எனக்கு இப்போ இருக்கு. நேற்று பார்த்த மாதிரி இருக்கு ஆனால் அதற்குள் யுவன் 25 ஆண்டுகள் கடந்துவிட்டது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். 

Leave a comment

Comment