TamilsGuide

2 முறை எழுதியும் திருப்தி இல்லை, கடுப்பில் எழுதிய 3-வது பாடலுக்கு தேசிய விருது - கமலுக்காக வாலி எழுதிய சூப்பர் ஹிட் பாடல்

கமல்ஹாசன், ரூபினி, கௌதமி, மனோரமா, ஸ்ரீவித்யா, ஜெய்சங்கர், நாகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்த நிலையில், பாடல்கள் அனைத்தையும் வாலி எழுதியிருந்தார்.

தமிழ் சினிமாவில், தனது பாடல்கள் மூலம் 5 தலைமுறை நடிகர்களுக்கு ஹிட் கொடுத்த கவிஞர் வாலி, இலக்கிய நயமாகவும், எளிமையான தமிழிலும் பல பாடல்கள கொடுத்துள்ள நிலையில், கமல்ஹாசன் படத்திற்காக எழுதிய ஒரு பாடல் இயக்குனருக்கு பிடிக்காததால், கடுப்பில் வாலி எழுதிய ஒரு பாடலுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் பல டெக்னாலஜிகளை அறிமுகம் செய்து வைத்தவர் கமல்ஹாசன். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், பாடல் ஆசிரியர், பாடகர் என பன்முக திறமை கொண்ட கமல்ஹாசன், நடிப்பில் கடந்த 1989-ம் ஆண்டு வெளியான படம் அபூர்வ சகோதரர்கள். கமல்ஹாசன் 3 வேடங்களில் நடித்திருந்த இந்த படத்தில் ஒரு கேரக்டரில் குள்ளமான நபராக நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றிப்படமாக இந்த படம் இன்றுவரை போற்றப்படுகிறது.

கமல்ஹாசன், ரூபினி, கௌதமி, மனோரமா, ஸ்ரீவித்யா, ஜெய்சங்கர், நாகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்த நிலையில், பாடல்கள் அனைத்தையும் வாலி எழுதியிருந்தார். சிங்கீதம் சீனிவாசன் இயக்கிய இந்த படத்தில், காதல் தோல்வி காட்சிக்காக வாலி ஒரு பாடலை எழுதியுள்ளார். இந்த பாடலை பார்த்த படத்தின் இயக்குனர் சிங்கீதம் சீனிவாசன ராவ் தனக்கு பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் வீட்டுக்கு வந்த வாலி, 2 முறை பாடலை எழுதியுள்ளார். அந்த 2 பாடல்களையும் கேட்ட சிங்கீதம் சீனிவாச ராவ் இன்னும் கொஞ்சம் பெட்டராக இருந்தால் பரவாயில்லை என்று சொல்ல, அவர் தெலுங்கு, தமிழ் தெரியாது என்று கமல்ஹாசனிடம் சொல்ல, அதற்கு அவர் இந்த படத்தின் இயக்குனர் என்று கமல் கூறியுள்ளார். இதை கேட்டு மேலும் டென்ஷன் ஆன வாலி, நான் என்ன வாலியா இல்ல வாலிபாலா அவர் ஒரு தட்டு நட்டுகிறார், இவரு ஒரு தட்டு தட்டுகிறார் என்று கூறியுள்ளார்.

மேலும் என்னால் இனி எழுத முடியாது வேறு ஒருவரை வைத்து எழுதிக்கொள் என்று வாலி சொல்ல, இல்லை நீங்கள் தான எழுத வேண்டும் எழுதுங்கள் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். அதன்பிறகு வாலி எழுதிய பாடல் தான் உன்னை நினைத்தேன் பாட்டு படிச்சேன் பாடல. அவர் வேண்டா வெறுப்பாக எழுதிய இந்த பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். 

தமிழச்சி கயல்விழி 

Leave a comment

Comment