TamilsGuide

ஒரே பாடல், சிவாஜி - சிவக்குமார் இருவருக்கும் பாடிய டி.எம்.எஸ்- கேள்விக்கு பதில் பாட்டு சூப்பர் ஹிட்டு

தனது மகன் என்று தெரிந்துகொள்ளாத சிவாஜி, தனது மகன் போல் அதிக பாசம் காட்டுவார். படத்தில் படிப்பறிவு இல்லாத சிவக்குமார் நடிகை பாரதி இருவரும் காதலிப்பார்கள்.

தமிழ் சினிமாவில் 5 தலைமுறை நடிகர்களுக்கு ஹிட் பாடல்களை பாடி வெற்றிகளை குவித்த டி.எம்.சௌந்திரராஜன், எந்த நடிகருக்காக பாடினாலும், அந்த நடிகரின் குரலாகவே மாறும் திறமையுடன் இருந்த டி.எம்.எஸ், ஒரே பாடலை சிவாஜி, சிவக்குமார் இருவருக்கும் அவர்களின் குரலாகவே பாடியுள்ளார். அந்த பாடலும் பெரிய வெற்றியாக அமைந்தது.

1968-ம் ஆண்டு ஏ.வி.எம் நிறுவனம் தயாரிப்பில் வெளியான படம் உயர்ந்த மனிதன். கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், சிவாஜி, வாணிஸ்ரீ, சிவக்குமார், பாரதி, சௌகார் ஜானகி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திரு இந்த படத்தின் அத்தனை பாடல்களையும் கவிஞர் வாலி எழுதியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில, பாடல்கள் பெரிய ஹிட் அடித்தது.

வாணிஸ்ரீயை காதலித்த பெரும் பணக்காரரான சிவாஜி கணேசன், சந்தர்ப்ப சூழ்நிலையால், சௌகார் ஜானகியை திருமணம் செய்துகொள்வார். இதனால் வாணிஸ்ரீயை ஏமாற்றிவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில் இருக்கும், சிவாஜியிடம் வேலைக்கு வருபவர் தான் சிவக்குமார். வாணிஸ்ரீயின் மகனாக இவர், தனது மகன் என்று தெரிந்துகொள்ளாத சிவாஜி, தனது மகன் போல் அதிக பாசம் காட்டுவார். படத்தில் படிப்பறிவு இல்லாத சிவக்குமார் நடிகை பாரதி இருவரும் காதலிப்பார்கள்.

அப்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்த சிவக்குமாரை முன்னுக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துடன், ஏவிஎம் நிறுவனம் சிவக்குமார் – பாரதி ஜோடிக்கு ஒரு பாடல் வைத்திருப்பார்கள். சிவக்குமார் வாழ்க்கையில் வெளிச்சத்தை ஏற்படுத்தும் வகையில் ஏ.வி.எம்.நிறுவனம் இந்த பாடலை வெளியிப்புற படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். முதலில் இந்த பாடல் சிவாஜிக்கு தான் என்று முடிவு செய்து, டி.எம்.எஸ் அந்த பாடலை பாடியுள்ளார்.

டி.எம்.எஸ் எப்போது பாடினாலும், அந்த நடிகர்களின் குரலாகவே மாறும் திறன் உள்ளதால், சிவாஜிக்காக அவரே பாடுவது போல் பாடி முடித்துள்ளார். இந்த பாடலை கேட்ட இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சு படத்தில் இந்த பாடல் சிவக்குமாருக்கு வருகிறது. ஆனால் நீங்கள் சிவாஜிக்கு வருவது போல் பாடி இருக்கிறீர்கள். இது எப்படி சரியாக வரும் வேண்டாம். வேறு யாரையாவது வைத்து பாட வையுங்கள் என்று கூறியுள்ளனர். ஏ.வி.எம். செட்டியாரும் இந்த பாடல் சிவக்குமாருக்கு கண்டிப்பாக செட் ஆகாது. இவர் சிவாஜி பாடுவது போல், ரொம்ப கத்தி பாடியுள்ளார். மீண்டும் டி.எம்.எஸை அழைத்து மாற்றி பாட முடியுமா என்று பாருங்கள் என்று கூறியுள்ளார்.

டி.எம்.எஸ் வந்தவுடன், என்னப்பா சிவக்குமாருக்கு பாட சொன்னால், நீ சிவாஜிக்கு பாடி இருக்கிறாய் என்று சொல்ல, அவருக்கு என்று சொன்னதால் அப்படி பாடினேன். ஆனால் இவருக்கு என்று சொல்லி இருந்தால் இவருக்காக பாடியிருப்பேன் என்று சொல்ல, மீண்டும் பாடல் பதிவு தொடங்கியுள்ளது. முன்பு சிவாஜிக்கு பாடிய டி.எம்.எஸ், சிவக்குமாருக்கு அப்படியே மாற்றி பாடியுள்ளார். இந்த பாடலும் பெரிய ஹிட்டாக அமைந்துள்ளது. அந்த பாடல் தான் கேள்விக்கு என்ன பதில் என்ற பாடல். இந்த பாடல் இன்றைக்கும் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்க்கும் பாடலாக நிலைத்திருக்கிறது. 

தமிழச்சி கயல்விழி

Leave a comment

Comment