தமிழ் சினிமாவில், 5 தலைமுறை நடிகர்களுக்கு பாடல்கள் எழுதிய வாலி இவ்வளவு புகழ் பெற முக்கிய காரணமாக இருந்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தான்.
க்ளாசிக் தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை கொடுத்த கவிஞர் வாலி, ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதியிருந்தாலும், அவருக்கு முதல் பெரிய ஹிட் கொடுத்த இசைமைப்பாளர் என்றால் அது மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தான். ஆனால் அவர் இறந்தால் வாலி நான் அழமாட்டேன் என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் தொடங்கி தற்போதைய நடிகர் சிம்பு வரை 5 தலைமுறை நடிகர்களுக்கு தனது பாடல்கள் மூலம் ஹிட் கொடுத்தவர் தான் கவிஞர் வாலி. தனது வாழ்நாளில் இறுதிவரை வாலிப கவிஞர் என்று போற்றப்பட்ட இவர், கவியரசர் கண்ணதாசனுக்கு போட்டியாக திரைப்பட பாடல்கள் எழுத வந்தவர். அவரிடம் உதவியாளராக சேரும் வாய்ப்பை கூட நிராகரித்தவர். பல போராட்டங்களுக்கு பிறகு எம்.எஸ்.விஸ்வநாதன் கொடுத்த வாய்ப்பில் கவிஞராக மாறிவிட்டார் வாலி.
பாடல் எழுதி புகழ் பெற்ற வாலி, எம்.ஜி.ஆர் சிவாஜி என முன்னணி நடிகர்களுக்கு பாடல் எழுத தொடங்கிய நிலையில், எம்.ஜி.ஆர் கண்ணதாசன் இடையே இருந்த கருத்துவேறுபாடு, எம்.ஜி.ஆர் படங்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்பை பெற்று கொடுத்தது. வாலியின் பாடல்களை கேட்ட எம்.ஜி.ஆர், இனி என் படங்களுக்கு வாலி தான் பாடல்கள் எழுதுவார் என்று ஒரு அரசியல் மேடையிலேயே அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார்.
தமிழ் சினிமாவில், 5 தலைமுறை நடிகர்களுக்கு பாடல்கள் எழுதிய வாலி இவ்வளவு புகழ் பெற முக்கிய காரணமாக இருந்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தான். இது குறித்து வாலியே பல மேடைகளில் கூறியுள்ளார். ஒருமுறை எம்.எஸ்.வி மது போதையில் இருந்தபோது தனது உதவியாளர்கள் பலரிடம் நான் செ*த்துப்போனால் நீ எப்படி அழுவாய் என்று கேட்டுள்ளார். அந்த வரிசையில் அங்கே இருந்த வாலியிடமும் இதை கேட்க அவரோ நீங்கள் செ*த்தால் நான் அழமாட்டேன் அண்ணா என்று கூறியுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சியான எம்.எஸ்.வி நான் செ*த்தா அழக்கூட மாட்டியாயா? என்று கேட்கே, எப்படி அண்ணா அழமுடியும்? நீங்கள் செ*த்தால் நானும் செ*த்துவிடுவேனே பிறகு எப்படி அழ முடியும்? இதை கேட்ட எம்.எஸ்.வி பாத்தியா இவன் தான் என் மேல் அன்பு வைத்திருக்கிறான் என்று சொல்லி தயாரிப்பு மேலாளரை அழைத்து, இந்த படத்தில் வேறு எந்த கவிஞரும் இல்லை, முழு பாடலும் வாலி தான் எழுதுவார் என்று கூறியுள்ளார். இந்த தகவலை பிரபல கவிஞர் நெல்லை ஜெயந்தா டூரிங் டாக்கீஸ் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
தமிழச்சி கயல்விழி


