தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகன், ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள படம் ‘சிக்மா’. இப்படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்க அவருடன் பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜேபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ஜேசன் சஞ்சயின் தயாரிப்பு நிறுவனமான ஜேஎஸ்கே மீடியா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். ‘சிக்மா’ திரைப்படம் அடுத்த மாதம் 31-ந்தேதி உலக அளவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், ‘சிக்மா’ படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, ‘சிக்மா’ படத்தின் முதல் பாடலான Sigma Style நாளை வெளியாகிறது. இதுகுறித்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


