கனடா, இயற்கை எரிவாயு உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் சாதனை படைத்துள்ளது.
இந்த மார்ச் மாதத்தில் 775.12 மில்லியன் ஜிகா ஜூல்கள் அளவுக்கு கனடா எரிசக்தி உற்பத்தி செய்துள்ளது.
இது, 2025 மார்ச் மாதத்தை ஒப்பிடும்போது 5.6 சதவிகிதம் அதிகமாகும். பிரிட்டிஷ் கொலம்பியாவில் 13.8 சதவிகிதமும், ஆல்பர்ட்டாவில் 1.2 சதவிகிதமும் எரிவாயு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், இப்போது கனடா, அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, உலகுக்கே அதிக அளவில் எரிவாயு ஏற்றுமதி செய்துவருகிறது.
கனடா ஏற்றுமதி செய்யும் இயற்கை எரிவாயுவின் அளவு 7.4 சதவிகிதம் உயர்ந்து 339. 7 மில்லியன் ஜிகா ஜூல்களாக ஆகியுள்ளது.
கனடாவிலிருந்து அதிகம் எரிவாயு வாங்கும் நாடாக திகழும் அமெரிக்கா, மார்ச் மாதத்தில் மட்டும் 282.1 மில்லியன் ஜிகா ஜூல்கள் எரிவாயு வாங்கியுள்ளது.
என்றாலும், 2025 மார்ச் மாதத்தை ஒப்பிடும்போது, இது 10.8 சதவிகிதம் குறைவு ஆகும்.
ஆக, அமெரிக்கா தவிர்த்து மற்ற நாடுகளுக்கு கனடா ஏற்றுமதி செய்யும் எரிவாயுவின் அளவு, இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது, சாதனை அளவை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


