TamilsGuide

நீங்கள் ஒரு பைத்தியம்....நெதன்யாகுவை திட்டிய டிரம்ப்

நீங்கள் ஒரு பைத்தியம். நான் மட்டும் இல்லையென்றால், நீங்கள் இந்நேரம் சிறையில் இருந்திருப்பீர்கள். நான் உங்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன். இப்போது அனைவரும் உங்களை வெறுக்கிறார்கள்.

இதன் காரணமாகவே, இஸ்ரேலையும் அனைவரையும் வெறுக்கிறார்கள் என ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை மிகவும் கோபமாக பேசியதாக ஆக்சியோஸ் நிறுவனத்திடம் வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான தொலைபேசி உரையாடலின்போதே அவர் மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த தொலைப்பேசி உரையாடலுக்குப் பிறகு,

"அனைத்துவிதமான துப்பாக்கிச் சூடு தாக்குதல்களும் நிறுத்தப்படும் என்றும், இஸ்ரேல் ஹிஸ்புல்லாவைத் தாக்காது, அவர்களும் இஸ்ரேலைத் தாக்க மாட்டார்கள் என்றும்” ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.

 தொடர்ந்து, “இஸ்ரேல் நகரங்களையும், மக்களையும் தாக்குதவதை ஹிஸ்புல்லா நிறுத்தாவிட்டால், பெய்ரூட்டில் உள்ள அமைப்பினரின் இலக்குகளை இஸ்ரேல் தாக்கும் என்று ட்ரம்ப்பிடன் தெரிவித்தேன்.

எங்களின் இந்த நிலைப்பாடு மாறவில்லை. அதே சமயம், தெற்கு லெபனானில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் திட்டமிட்டபடி தொடர்ந்து செயல்படும்” என நெதன்யாகு பதிவிட்டுள்ளார்.  

Leave a comment

Comment