தெலுங்கு திரைப்பட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி நீண்ட காலமாக ஹைதராபாத்தில் மீண்டும் Imax திரையரங்கம் வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார். அந்த விருப்பம் தற்போது நனவாகியுள்ளது. தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு மற்றும் Asian Cinemas இணைந்து ஹைதராபாத்தில் புதிய Imax திரையரங்கை கொண்டு வர உள்ளதாக அறிவித்துள்ளனர்.
புதிய Imax திரையரங்கம் "AMB Classic Victory" வளாகத்தில் அமைக்கப்பட உள்ளது. இது 2026 இறுதிக்குள் திறக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், எதிர்காலத்தில் ஹைதராபாத்தில் கூடுதலாக Imax திரைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் வாரணாசி திரைப்பட ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் Imax வடிவத்திற்காகவே உருவாக்கப்பட்டு வருவதாக ராஜமௌலி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
ஹைதராபாத்தில் சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு Imax மீண்டும் வர உள்ளது. அதுமட்டுமல்லாமல், தெலுங்கு சினிமாவின் தொழில்நுட்ப வளர்ச்சியில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. "தெலுங்கு சினிமாவின் மையமாக இருக்கும் ஹைதராபாத்தில் Imax இல்லாதது ஆச்சரியமாக உள்ளது" என்று முன்பு கூறிய ராஜமௌலியின் ஆசை தற்போது நிறைவேறியுள்ளது. மகேஷ் பாபுவின் முயற்சியால், உலகத் தரத்திலான திரையரங்கு அனுபவம் மீண்டும் ஹைதராபாத் ரசிகர்களுக்கு கிடைக்கவுள்ளது.


