TamilsGuide

அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336 ரூபாவை கடந்தது - மத்திய வங்கி அறிவிப்பு

இலங்கை வரலாற்றில் அமெரிக்க டொலருக்கு எதிரான உள்ளூர் நாணயத்தின் மதிப்பில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 336 இலங்கை ரூபாய் என்ற எல்லையைத் தாண்டியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று (02) வெளியிட்ட தினசரி மாற்று விகித அறிவிப்பின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் கணிசமான உயர்வைச் சந்தித்துள்ளன.

அதன்படி, இன்றையதினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 326.75 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 336.60 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று டொலரின் கொள்வனவு விலை 78 சதத்தாலும், விற்பனை விலை 90 சதத்தாலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, இன்றைய தினம் வங்கித்துறையில் ஒரு அமெரிக்க டொலரை விற்பனை செய்வதற்கான அதிகபட்ச விலை 336.60 ரூபாயாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அதனை கொள்வனவு செய்வதற்கான விலை 326.75 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment