TamilsGuide

இளையராஜா பிறந்தநாள் - வாழ்த்து தெரிவிக்க குவிந்த ரசிகர்கள்

இசைஞானி இளையராஜாவின் இன்று தனது 83-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இளையராஜாவின் பிறந்தநாளை ஒட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிக்க கோடம்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகம் முன்பு ரசிகர்கள் குவிந்தனர்.

''நலம் வாழ எந்நாளும்.. என் வாழ்த்துகள்.. தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்'' இளையராஜாவின் அலுவலகம் முன்பு பாடல் பாடி ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்திலுள்ள பண்ணைப்புரம் என்னும் கிராமத்தில் பிறந்தவர் இளையராஜா. 1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில், வெளியான 'அன்னக்கிளி' படத்தின் மூலம்தான் தனது இசைப்பயணத்தை தொடங்கினார் இசைஞானி இளையராஜா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். மேலும் 7,000 பாடல்களை எழுதி உள்ளார்.

திரையுலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலான சாதனைகளைப் படைத்துள்ள இவர், 8,600-க்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தனது இசைப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்.
 

Leave a comment

Comment