TamilsGuide

ஐரோப்பிய ஒன்றியத்தில் கனடா இணைவது குறித்து ஐரோப்பிய நாடொன்றின் தலைவரின் கருத்து

ஐரோப்பிய ஒன்றியத்தில் கனடா இணைவது குறித்து ஐரோப்பிய நாடொன்றின் தலைவர் தெரிவித்துள்ள கருத்து, தலைப்புச் செய்தியாகியுள்ளது.

கனடா ஒரு வட அமெரிக்க நாடு! உலக வரைபடத்தைப் பார்த்தாலே, கனடாவும் அமெரிக்காவும் வெறும் ஒரு எல்லைக்கோட்டினால் மட்டுமே பிரிக்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரியும். 

அப்படியிருந்தும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொடுத்துவரும் தொல்லையால், பேசாமல் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்துவிடலாமா என்னும் எண்ணம் கனடாவுக்கு உருவாகிவருவதுபோல் தெரிகிறது என சில மாதங்களுக்கு முன் செய்தி ஒன்று வெளியானது.

நிபுணர்களிடம், ஐரோப்பிய ஒன்றியத்துடன் கனடா இணைவது சாத்தியமா என கேள்வி எழுப்பினால், அது சாத்தியமே என்கிறார்கள் அவர்கள்.

இந்நிலையில், கடந்த மாதம் பின்லாந்து பிரதமரான அலெக்சாண்டர் (Alexander Stubb), கனடா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையுமானால், அதை வரவேற்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது ஸ்வீடன் பிரதமரும், கனடா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது குறித்த தனது கருத்தை நகைச்சுவையுடன் வெளிப்படுத்தியுள்ளார்.

நோர்டிக் பகுதிக்கு வெளியிலிருந்தாலும், கனடா ஒரு நோர்டிக் நாடு என அழைக்கப்பட எல்லா தகுதிகளும் உடைய நாடு என நாங்கள் ஸ்வீடனில் நகைச்சுவையாகக் கூறுவதுண்டு என்று கூறியுள்ள ஸ்வீடன் பிரதமரான Ulf Kristersson, நம் இரு நாடுகளுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன என்றும், ஐரோப்பிய ஒன்றியம், ஒத்த கருத்துடையவர்களை வரவேற்கும் ஒரு அமைப்பு என்றும் கூறியுள்ளார். 

டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நோர்வே, ஸ்வீடன் முதலான வட ஐரோப்பா மற்றும் வட அட்லாண்டிக் பகுதி நாடுகள் நோர்டிக் நாடுகள் என அழைக்கப்படுகின்றன.

கனடாவும் ஸ்வீடனும், பாதுகாப்பு தொடர்பிலான அமைப்பு ஒன்று குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நேரத்தில், கனடா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது குறித்து மற்ற நாடுகள் தெரிவித்துவரும் கருத்து குறித்து ஸ்வீடன் பிரதமரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோதுதான் அவர் இப்படி ஒரு கருத்தைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment