TamilsGuide

காணாமல்போன மீனவர்களின் குடும்பத்தினருக்கு டக்ளஸ் தேவானந்தா ஆறுதல்

பருத்தித்துறை பகுதியில் இருந்து கடற்தொழிலுக்காக கடலுக்குச் சென்று காணாமல் போன மீனவர்களின் உறவினர்களை டக்ளஸ் தேவானந்தா நேற்றைய தினம் சந்தித்துள்ளார்.

அதன்போது, தொழிலுக்குச் சென்ற மீனவர்களை தேடும் முயற்சிகளில் பலர் ஈடுபட்டிருக்கின்ற போதிலும் இதுவரையில் திருப்திகரமான பதில் எதுவும் கிடைக்கவி்ல்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடலுக்கு போனவர்கள் உரிய நேரத்திற்கு கரை திரும்பவில்லை என்றதும், கடற்படையினரை அனுப்பி தேடுவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
 

Leave a comment

Comment