• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மஸ்கெலியாவில் மண்மேடு சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு

இலங்கை

மஸ்கெலியா, கிளன்டில் தோட்டம் பகுதியில் மண்மேடு ஒன்று சரிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளன்டில் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பந்தப்பட்ட நபர் தனது வீட்டிற்கு அருகில் மற்றுமொரு கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக மண்ணை அகற்றிக் கொண்டிருந்தபோதே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார் என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
 

Leave a Reply