விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து பாப்புலர் ஆனவர் காவ்யா அறிவுமணி. அவர் VJ சித்ரா மறைவுக்கு பின் அந்த ரோலில் நடிக்க வந்தவர்.
காவ்யா அந்த சீரியலில் இருந்து பாதியிலேயே விலகி படங்களில் நடிக்க சென்றுவிட்டார். அவர் சில படங்களில் நடித்த நிலையில் பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.
திரும்பி போற ஐடியா இல்லை..
இந்நிலையில் காவ்யா அறிவுமணி தான் நிராகரிக்கப்படுவது பற்றி ஆதங்கத்துடன் பதிவிட்டு இருக்கிறார்.
"நிராகரிப்பு.. நிராகரிப்பு.. நிராகரிப்பு.. எனக்கு இது ஒன்னும் புதுசு இல்லை. கொழுந்து விட்டு எரியுற தீயை அணைக்கமுடியாது. ஒருநாள் வெடிக்கும். என் ரயில்ல நான் ஏறாம விடமாட்டேன். திரும்பி போற ஐடியாவே இல்லை" என அவர் பதிவிட்டுள்ளார்.


