TamilsGuide

சனாதனம் மதமல்ல, வாழ்க்கை முறை - நடிகர் அர்ஜூன்

அர்ஜூன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிப்பில் நேற்று (மே.28) வெளியான படம் பிளாஸ்ட். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பட ரிலீஸையொட்டி நடிகர் அர்ஜூன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,

“பிளாஸ்ட் படம் வெளியாகி ரசிர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருப்பது மகிழ்ச்சி. அபிராமி, பிரீத்தி முகுந்தன் பிரமாதமாக சண்டை காட்சிகளில் நடித்துள்ளனர்.

சனாதனம் என்பது நம் வாழ்க்கை பாதை. நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும். எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்கிறது. தவறு செய்யக்கூடாது, அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படக் கூடாது. இதுவும் சனாதன தர்மத்தில் ஒன்று.

குழந்தையாக இருக்கும் போது நம்மை தாய், தகப்பன் எப்படி பார்த்துக்கொண்டார்கள். அவர்களுக்கு வயது ஆகும் போது அவர்களை கடவுள் மாதிரி பார்த்துக்கொள்ள வேண்டும் என சனாதன தர்மம் சொல்கிறது.

சனாதனம் இருக்கக் கூடாது என்றால் அவர்கள் அப்பா, அம்மாவை வெளியில் துரத்த வேண்டும். முடியுமா? சனாதனம் என்பது மதம் கிடையாது. நம் வாழ்க்கை பாதை.

எனக்கு தெரிந்த அளவிற்கு நான் சொல்கிறேன். அதை எல்லாரும் புரிந்து கொண்டால் நல்லா இருக்கும். நான் ரீல் முதல்வனாகத் தான் நடித்திருக்கிறேன்.

பெரிய வெற்றியோட முதல்- அமைச்சர் விஜய் ஜெயித்து வந்திருக்கிறார். நல்லது பண்ண வேண்டும் என பண்ணிக் கொண்டிருக்கிறார். அவருக்கு நேரம் கொடுக்க வேண்டும். 100 சதவீதம் முதல்-அமைச்சர் விஜய் நல்லது பண்ணுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதற்கான அறிகுறிகள் தெரிகிறது.

இன்றைய சமுதாயத்தில் பெண் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என பிளாஸ்ட் படத்தில் சொல்லி இருக்கிறோம். எல்லோருக்கும் அந்த விஷயத்தில் விழிப்புணர்வு வேண்டும். பள்ளியிலும் சுய பாதுகாப்பு குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு அவசியம்.” என தெரிவித்தார். 
 

Leave a comment

Comment