• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டப்பிங் பணியில் அன்பே டயானா

சினிமா

ஜமா புகழ் பாரி இளவழகன் - NEEK படத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் இணைந்து நடித்துள்ள படம் ‘அன்பே டயானா’. பாரி இளவழகன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு முக்கிய வேடத்தில் நடிகை ரோஜா நடித்துள்ளார். 'குட் நைட்', 'டூரிஸ்ட் ஃபேமிலி' ஆகிய வெற்றி படங்களை தயாரித்திருந்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டு இருந்தார்.

இதனை தொடர்ந்து ‘அன்பே டயானா’ படத்தின் டைட்டில் டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். டீசரில் பெரம்பூரில் வசிக்கும் கதாநாயகனின் குடும்பம், நண்பர்கள் மற்றும் காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கதாநாயகனுக்கு பெற்றோராக சேத்தன் மற்றும் ரோஜா நடித்துள்ளனர். மேலும் கோபி அரவிந்த், நிகிலா சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், ‘அன்பே டயானா’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது டப்பிங் பணி நடைபெற்று வருகிறது. டப்பிங் பணி நடைபெற்றுவருவது தொடர்பாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும் ரசிகர்கள் கொண்டாடும் விதமாகவும் குடும்பத்துடன் கண்டுகளிக்கவும் விரைவில் ‘அன்பே டயானா’ திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply