TamilsGuide

அரச துறையின் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான Champions படையணி திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

அடுத்த சில ஆண்டுகளில் நாட்டின் அனைத்து அரச நிறுவனங்களிலும் மிகப்பெரிய தொழில்நுட்ப பரிவர்த்தனை மாற்றம் ஏற்படுத்தப்படும் என டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகரும் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் தலைவருமான ஹான்ஸ் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு நிறைவேற்று அதிகாரிகளுக்கான விழிப்புணர்வூட்டும் நிகழ்வு, கொழும்பு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.

டிஜிட்டல் பரிவர்த்தனையை ஏற்படுத்துவதற்காக அரச நிறுவனங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களிலிருந்து Champions படையணியை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய திறமையையும் தகுதியையும் கொண்ட உத்தியோகத்தர்களின் விண்ணப்பங்களை அனுப்புமாறு நிறுவனத் தலைவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
 

Leave a comment

Comment