TamilsGuide

நள்ளிரவில் அமெரிக்க தாக்குதல் - அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்

நள்ளிரவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் விடிய காலையில் ஈரானும் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு போர் வெடிக்கும் அபாயம் உருவாகி இருக்கிறது.

வளைகுடாவில் கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களுடன் தொடங்கிய ஈரான் - அமெரிக்க  போர், 3 மாதங்களைக் கடந்து தொடர்கிறது. இந்த போர் காரணமாக பல நூறு பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போர் காரணமாக ஹார்முஸ் முடக்கப்பட்டுள்ள நிலையில், எரிசக்தி விலையும் உச்சத்திற்கு பறந்துள்ளது. கடந்த திங்கள்கிழமை ஈரான் கடற்படையின் கண்ணிவெடி வைக்கும் படகுகள் மற்றும் ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்காவின் சென்ட்காம் படை நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, நேற்று நள்ளிரவும் அமெரிக்க ராணுவம் ஈரானுக்குள் புகுந்து அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளது.

அமெரிக்கப் படைகளுக்கும், ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் சர்வதேச வணிகக் கப்பல்களுக்கும் அச்சுறுத்தலாக விளங்கிய ஈரானின் முக்கிய ராணுவத் தளம் ஒன்றைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகப் அமெரிக்க அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது மட்டுமன்றி, அமெரிக்க இலக்குகளை நோக்கிப் பாய்ந்து வந்த ஈரானின் பல போர் ட்ரோன்களையும் அமெரிக்க ராணுவம் நடுவானில் சுட்டு வீழ்த்தியுள்ளது.

அமெரிக்காவின் இந்த நள்ளிரவுத் தாக்குதலுக்குப் பதிலடியாக, இன்று (வியாழக்கிழமை) அதிகாலை உள்ளூர் நேரப்படி 04:50 மணிக்கு, ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை அமெரிக்காவின் முக்கிய வான்படைத் தளம் ஒன்றின் மீது ஏவுகணைகள் மூலம் அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் அந்நாடு ஊடகம் அறிவித்துள்ளது.       
 

Leave a comment

Comment