TamilsGuide

மத்திய கிழக்கு மோதல் - கடுமையாக திட்டி தீர்த்த ட்ரம்ப்

மேற்காசிய முதல் தொடர்பாக தனக்கு எதிராக செய்தி வெளியிடும் ஊடகங்களை ட்ரம்ப் மீண்டும் கடுமையாகச் சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: ஈரான் போரில் தோல்வி அடைந்து அவர்களது தலைமை சரணடைதல் ஆவணங்களிலும் கையெழுத்திட்டால் கூட இந்த ஊடகங்கள் நமக்கு எதிராக போலி செய்தி வெளியிடுவார்கள்.

அமெரிக்காவின் பெரும் சக்திக்கும் வலிமைக்கும் முன் ஈரான் தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டால் கூட, நியூயார்க் டைம்ஸ், வால் ஸ்ட்ரீட் ஜர்னல், சிஎன்என் ஆகியோர், ஈரான் அமெரிக்காவை புத்திசாலித்தனமான முறையில் வென்றது என தலைப்புச் செய்தி ஆக்குவார்கள்.

ஈரான் சரணடையும் நிகழ்வை கூட அமெரிக்கா தோல்வி அடைந்தது என்று தவறாக சித்தரித்து செய்தி வெளியிடுவார்கள்.

இவர்கள் எனது நிர்வாகத்திற்கு எதிராக பாரபட்சமாக செயல்படுகின்றனர்.

முற்றிலும் வழிதவறிவிட்டனர். அவர்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
 

Leave a comment

Comment