TamilsGuide

திருமணமான தம்பதியர்களுக்கு நிகழ்ந்த சம்பவம்… மனைவியின் சிறுநீரகம் செயலிழந்த நிலையில்…

கணவன் தனது சிறுநீரகத்தை தானம் கொடுத்த கொடுத்துள்ளார்…
ஆனால், இவர்கள் இருவரும் சில ஆண்டு வாழ்ந்து, பிறகு மனைவி விகரத்து கோருகிறார்கள்…
அப்போது கணவன் தான் தானமாக கொடுத்த கிட்னியை திரும்ப தருமாறும் அல்லது நஷ்ட ஈடாக 1.5 மில்லியன் டாலர் மனைவியிடம் கொரிக்கை வைக்கிறார்…  
மருத்துவ சட்டத்தின் படி, ஒருமுறை தானமாக கொடுத்த உடல் உறுப்புகளை திரும்பி கேட்க முடியாது என்பதுதான் விதிமுறை…
இந்த வழக்கினை விசாரித்த நியூயார்க் உச்ச நீதிமன்றம் (Nassau County Supreme Court), கணவனின் கோரிக்கையை முற்றிலுமாக நிராகரித்து 10 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வெளியிட்டது…
விவாகரத்தின் போது தம்பதியரின் கூட்டுச் சொத்துக்கள் (Marital Property) மட்டுமே பிரிக்கப்படும். 
மனித உடலின் திசுக்களோ அல்லது உள் உறுப்புகளோ சட்டப்படி "பகிரப்படக்கூடிய சொத்து" பட்டியலின் கீழ் வராது.
சட்டத்தின்படி, ஒருவர் தனது உடல் உறுப்பை முழு மனதுடன் தானமாக (Gift) வழங்கிவிட்ட பிறகு, அதன் மீதான முழு உரிமையையும் அவர் இழந்துவிடுகிறார்.

அதை எக்காரணம் கொண்டும் திரும்பக் கேட்க முடியாது.உறுப்பு விற்பனை சட்டவிரோதம்: மனித உறுப்புகளைப் பணத்திற்கு ஈடாக மதிப்பிடுவதோ அல்லது விற்பனை செய்வதோ சட்டப்படி கடுமையான குற்றமாகும்.
மனைவியின் உடலில் பொருத்தப்பட்ட சிறுநீரகத்தை மீண்டும் எடுத்தால், அது அவரது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதால் இக்கோரிக்கை மனிதநேயமற்றது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இந்த நிகழ்வில் உறுப்பு தானம் செய்தவர் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது…
பாசத்தில் தானம் கொடுத்துள்ளார்… விரக்தியில் தானம் கொடுத்த சிறுநீரகத்தை திருப்பி கேட்டுள்ளார்…
 

 

Leave a comment

Comment