உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் இன்று (27) மேலும் குறைவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தொடர்ச்சியாக சரிவடைந்து வரும் கச்சா எண்ணெய் விலைகள், தற்போது முக்கிய எண்ணெய் வகைகள் பலவும் 100 அமெரிக்க டொலருக்கும் குறைவான மட்டத்தில் பதிவாகியுள்ளன.
உலக சந்தைத் தரவுகளின்படி, ‘பிரெண்ட்’ வகை கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 97.33 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அதேவேளை, ‘டபிள்யூ.டி.ஐ’ (WTI) வகை கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலையும் 97.33 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது.
மேலும், ‘மர்பன்’ வகை கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 95.05 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


