அமெரிக்க MQ-9 ரீப்பர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான் - மத்திய கிழக்கில் பதற்றம்
ஈரானிய வான்வெளியில் அமெரிக்க MQ-9 ரீப்பர் ஆளில்லா விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது.
ஈரானிய எல்லைக்குள் நுழைந்த “சட்டவிரோத ஆளில்லா விமானம்” என அடையாளம் காணப்பட்ட பின்னரே அமெரிக்க விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேசமயம் அமெரிக்கா எதிர்காலத்தில் போர்நிறுத்த மீறல்களில் ஈடுபட்டால் பதிலடி கொடுக்கும் உரிமை ஈரானுக்கு இருப்பதாகவும் IRGC எச்சரித்துள்ளது.
அமெரிக்க இராணுவத் தாக்குதல்களுக்கு பிந்தைய பதற்றநிலை நீடித்து வரும் சூழலில் அமெரிக்க விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ர்அமை ப்ரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.






















