இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்து வரும் படம் ‘அரசன்’. இப்படம் வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில், விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, கிஷோர், பிரியங்கா மோகன், யோகி பாபு, ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தை தீபாவளி பண்டிகைக்கு வெளியிட திட்டமிடப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு அடுத்து என்னமாதிரியான கதைக்களத்தில் யாருடன் இணைவார்? என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்த நிலையில், ‘அரசன்’ படத்திற்கு பிறகு சிம்பு நடிக்கும் புதிய படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. ‘டியூட்’ படத்தின் இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்க உள்ளார். இப்படம் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகிறது. முன் தயாரிப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஐதராபாத்தில் 20 நாட்கள் கதை விவாதம் நடைபெற்றது, தற்போது சென்னை மகாபலிபுரத்தில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


