TamilsGuide

2026 மே மாதத்திற்குள் 1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை

இலங்கையின் சுற்றுலாத் துறையானது, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 2026 மே மாத இறுதிக்குள் ஒரு மில்லியன் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகையைக் கடந்துள்ளது.

2025 இல் பதிவு செய்யப்பட்ட சாதனைப் படைத்த செயல்திறனைத் தொடர்ந்து இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளதாகவும், அண்மைய சவால்கள் இருந்தபோதிலும் இத்துறையின் தொடர்ச்சியான வலிமையை இது பிரதிபலிப்பதாகவும் வெளிவிவகார, சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித்த ஹேரத் கூறினார்.

2026 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஆண்டுக்காண்டு சரிவைக் கண்டபோதிலும், மத்திய கிழக்கு மோதலின் தாக்கம் மற்றும் அது தொடர்பான பயண நிச்சயமற்ற தன்மைகள் உலகளாவிய சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பாதித்ததே இந்த மந்தநிலைக்குப் பெரும்பாலும் காரணம் என்று தொழில்துறை ஆய்வாளர்கள் கூறினர்.

2026-ஆம் ஆண்டிலும் இலங்கையின் முன்னணி சுற்றுலா மூலச் சந்தையாக இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது.

இந்த ஆண்டு இதுவரை 2 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் அங்கிருந்து வருகை தந்துள்ளனர்.

இந்தியாவை அடுத்து, ஐக்கிய இராச்சியம், ரஷ்யா, சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளிலிருந்தும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
 

Leave a comment

Comment