TamilsGuide

கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் முறிந்து வீழ்ந்த பாரிய மரம்

கொழும்பு, கொள்ளுப்பிட்டி மற்றும் பம்பலப்பிட்டிக்கு இடையேயான டுப்ளிகேஷன் வீதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது. 

இந்த விபத்தில், பாதையில் சென்றுகொண்டிருந்த ஒரு லொறி மற்றும் ஒரு காரும் சேதமடைந்துள்ளன.

இதன் காரணமாக, கொள்ளுப்பிட்டி மற்றும் பம்பலப்பிட்டிக்கு இடையேயான டுப்ளிகேஷன் பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
 

Leave a comment

Comment