TamilsGuide

16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை - மருத்துவர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாடு புகையிலை பழக்கத்தைப் போன்றே அவர்களது ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாக இங்கிலாந்து மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

பதினாறு வயதிற்கு உட்பட்டவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது தொடர்பான அரசாங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவர்கள் இந்த விவகாரத்தை முன்வைத்துள்ளனர்.

இதன்படி, சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு அவுஸ்திரேலியாவைப் போல முழுமையான தடை விதிப்பது உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் கொண்டுவரப்படும் என தொழில்நுட்பத் துறை அமைச்சர் லிஸ் கெண்டல் ( Liz Kendall) தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சமூக ஊடகப் பாதிப்பால் தங்கள் குழந்தைகளை இழந்த குடும்பங்கள் இன்று இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மரை நேரில் சந்தித்து இந்தத் தடையை உடனடியாக அமல்படுத்துமாறு வலியுறுத்தவுள்ளனர்.
 

Leave a comment

Comment