TamilsGuide

பிரபாசின் புதிய ஆடம்பர கனவு மாளிகை

‘பாகுபலி’ படத்தின் மூலம் சர்வதேச அளவில் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். தெலுங்கு திரை உலகில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. பிரபாஸ் தற்போது கல்கி 2898 ஏ.டி. படத்தின் 2-ம் பாகத்தில் நடித்து வருகிறார்.

பிரபாஸ் ஏற்கனவே ஐதராபாத் அருகே ராயதுர்கத்தில் ஆடம்பர விருந்தினர் இல்லத்தை வைத்துள்ளார். அங்கு தனது தனிப்பட்ட சந்திப்புகள் மற்றும் பிரபலங்களின் கொண்டாட்டங்களும் நடந்து வருகின்றன.

தற்போது அந்த பகுதி அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக கட்டிடங்கள் அதிகரித்து பரபரப்பான பகுதியாக மாறிவிட்டது. இதை தொடர்ந்து பிரபாஸ் புறநகர் பகுதியில் கனவு மாளிகை ஒன்றை கட்டி வருகிறார். 2 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்து வரும் இந்த வீட்டின் கட்டுமானம் சுமார் ரூ.160 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகின்றன. ஆடம்பர வசதிகளுடன் கூடிய அறைகள், தியேட்டர், நீச்சல் குளம், தோட்டங்கள், தனிப்பட்ட வசதியுடன் கூடிய குடியிருப்பு, உடற்பயிற்சி நிலையங்கள் உள்பட பல்வேறு வசதிகளுடன் பிரபாசின் கனவு மாளிகை தயாராகி வருகிறது.

வீட்டின் கட்டுமான பணிகள் நிறைவடைவதற்கு இன்னும் 2 ஆண்டுகள் ஆகும் என தகவல் வெளியாகி உள்ளது.

Leave a comment

Comment