TamilsGuide

முதலமைச்சர் விஜயை சந்திக்கும் திரைப்பிரபலங்கள் 

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருந்து தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். கட்சி ஆரம்பித்து சந்தித்த முதல் தேர்தலிலேயே அதிக இடங்களில் வென்று முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதை இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் பாராட்டி, விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, திரைப்பிரபலங்கள் பலரும் தினந்தோறும் முதலமைச்சர் விஜயை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சருடனான சந்திப்பின் போது எடுத்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், ஆக்ஷன் கிங் அர்ஜூன் முதலமைச்சர் விஜயை சந்தித்து பேசியுள்ளார். அவரை தொடர்ந்து இசையமைப்பாளர் தமனும் முதலமைச்சர் விஜயை சந்தித்துள்ளார்.

‘மாஸ்டர்’, ‘லியோ’ படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், முதலமைச்சர் விஜயை சந்தித்து பேசியுள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து, 'வாழ்த்துகள் அண்ணா' என்று பதிவிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment