TamilsGuide

இறுதி நேரத்தில் மறுத்த அமெரிக்கா - ஈரானுக்கு கைகொடுத்த மெக்சிகோ 

உலகக் கிண்ண காற்பந்தாட்டத் தொடரின் போது ஈரான் காற்பந்தாட்ட அணி மெக்சிகோவில் தங்குவதற்கு தமது அரசாங்கம் சம்மதம் தெரிவித்துள்ளதாக மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் (Claudia Sheinbaum) தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா இதற்கு மறுப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்தே மெக்சிகோ இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

ஈரான் காற்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் வெளியிட்ட தகவலின்படி, ஈரான் அணியின் தங்குமிடம் அமெரிக்காவின் அரிசோனாவுக்குப் பதிலாக, மெக்சிகோவின் எல்லை நகரமான டிஜுவானாவில் (Tijuana) அமைக்கப்படவுள்ளது.

உலகக் கிண்ணத் தொடருக்காக ஈரான் அணி அமெரிக்காவில் தங்குவதற்கு அந்தநாட்டு அரசாங்கம் அனுமதி மறுத்த நிலையிலேயே, மெக்சிகோ ஜனாதிபதி இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment