TamilsGuide

உலகளவில் வசூலை வாரிக்குவிக்கும் கருப்பு திரைப்படம்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் 

மூக்குத்தி அம்மன், வட்ல விசேஷம் ஆகிய திரைப்படங்களுக்கு பின் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான திரைப்படம் கருப்பு. இப்படத்தில் வேட்டை கருப்பனாக நடித்து நடிகர் சூர்யா மிரட்டியிருந்தார்.

அவருடன் இணைந்து நடிகை திரிஷா, இந்திரன்ஸ், அனாகா, ஸ்வாசிகா, ஷிவதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இளம் சென்சேஷனல் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

கடந்த மே 15ஆம் தேதி ரிலீஸ் ஆன கருப்பு திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த நிலையில், 11 நாட்களில் உலகளவில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 11 நாட்களில் இப்படம் ரூ. 266 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. வரும் நாட்களிலும் இதே வேகத்துடன் வசூல் செய்து ரூ. 300 கோடியை தொடுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 

Leave a comment

Comment