பிரபல கவிஞர் கார்த்திக் நேத்தா ஒரு நேர்காணலில் கண்ணதாசனின் கவிதைத்துவம் பற்றி பேசியுள்ளார். அதில், திரைப்படால்களில் ஒருவன் கவிதை எழுத முடியுமா? என்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் மனித உணர்ச்சிகள் அனைத்திற்கும் தனது பாடல்களால் உயிர் கொடுத்தவர் தான் கவியரசர் கண்ணதாசன். காதல், சோகம், மகிழ்ச்சி என ஒவ்வொரு உணர்ச்சிக்கும், தனது வரிகளால் ஆறுதல் கொடுத்த கண்ணதாசன், பாடல்கள் எழுதுவது மட்டும் இல்லாமல் அதில் கவிதை நடையிலும் எழுதி அசத்தக்கூடியவர். இன்றைய கால கவிஞர்களுக்கு கண்ணதாசன் எப்போதுமே ஒரு இன்ஸ்பிரேஷன் தான்.
அந்த வகையில் பிரபல கவிஞர் கார்த்திக் நேத்தா ஒரு நேர்காணலில் கண்ணதாசனின் கவிதைத்துவம் பற்றி பேசியுள்ளார். அதில், திரைப்படால்களில் ஒருவன் கவிதை எழுத முடியுமா? அவர் தான் கண்ணதாசன். இருவிழியாலே மாலையிட்டாள் என்று ஒரு பாட்டில் வரும். அதேபோல் மாலைப்பொழுதின் மயக்கதிலே பாடல். எண்ணங்களாலே பாலம் அமைத்து இரவும் பகலும் நடக்கவா என்ற வரிகள் இருக்கும். இன்றைக்கு ஒரு சாதாரண வரிகள் என்று இதை நினைக்கலாம். ஆனால், ஒரு திரைப்பாடல்களில் இப்படிப்பட்ட வரிகளை அமைத்து வியக்க வைத்தவர் கண்ணதாசன்.
குறிப்பாக நம்முடிய சித்தர் மறபையும் சங்க இலக்கிய காலகட்ட கவிதைகளையும், நம் பள்ளு, குறவஞ்சி மாதிரியான நாட்டார் மெட்டுகள் நாட்டார் எழுத்துகளையும் மிக்ஸ் பண்ணி, திரைப்பாடல்கள் கொடுத்து ஒரே கவிஞர் அவர் தான். தூக்கணாங்குருவிக்கூடு, அந்த பாட்டு ஒரு குறவஞ்சி கவிதை இலக்கியம் எப்படி இருக்குமோ அதற்கு இணையாக அந்த பாடல் இருக்கும். அதேபோல் ஆறு மனமே ஆறு பாடல்கள், ஒரு சித்திராவின் பாடலில் ஒரு வடிவமானது. தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு இதெல்லாமே ஒரு சித்தர் மனப்போக்கு தானே.
ஒரு சமூக வாழ்க்கைக்குள்ள ஒட்டி ஒட்டாமல் இருக்கும் ஒரு மனுஷன் அவ்வளவுதான். தங்கை தண்ணி போட்டுக்கொண்டு அவளை இவன் திட்ட வேண்டும். இவ்வளவுதான் சுட்சிவேஷன். நாம் எல்லாம்தான் என்ன எழுதிருப்போம்? தங்கை பெயரை சொல்லி திட்டி இருப்போம், இல்லை என்றால் வாடி வாடி பொட்ட புள்ள வெளியே என போட்டிருப்போம். ஆனால் கண்ணதாசன் அப்படி போடாமல் அதுக்குள் ஒரு மறபை வைத்து, ஒரு சித்தன் எப்படி சிந்திப்பான்? அவர் குடிகாரன்தான் குடிகாரனாக இருந்தாலும் அவனுக்குள் ஒரு ரோஷம் இருக்கிறது. அங்கு என்ன வேண்டுமானாலும் எழுதி இருக்கலாம். ஆனால், அதில் ஒரு தமிழ் மறபையே வைத்திருப்பார்.
அதேபோல் அவர் எழுதிய ஏழு ஸ்வரங்களுக்குள் பாடலை கேட்டு அவரை பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் என்னில் இருக்கிறது. நான் ஆண்களில் ஒருவனை காதலித்தேன் என்றால் அரு கண்ணதாசன் தான் என்று கூறியுள்ளார்.
தமிழச்சி கயல்விழி


