டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு இன்று (25) மீண்டும் வலுப்பெற்றுள்ளதாக
இலங்கை மத்திய வங்கி இதனை தெரிவித்துள்ளது.
நாணய மாற்று விகிதம்
இன்றைய நாணய மாற்று விகிதத்தின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 326.01 ரூபாவாகவும், அதன் விற்பனை விலை 336.42 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் முறையே 342.63 ரூபாவாகவும் மற்றும் 354.03 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






















