• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச பிணையில் விடுதலை

இலங்கை

இன்று (25) முற்பகல் தலங்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 18 ஆம் திகதி பத்தரமுல்லையில் உள்ள இராணுவ நினைவிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இராணுவ வெற்றி கொண்டாட்டத்திற்கான ஒத்திகை நிகழ்வுக்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்றைய தினம் தலங்கம பொலிஸ் நிலையத்தில் அவர் முன்னிலையான நிலையில் வாக்குமூலம் வழங்கலின் பின்னர் அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
 

Leave a Reply