4 அடி அடிச்சிருக்கலாம், அதுக்கு இப்படியா பண்ணுவீங்க? தாமதமாக வந்த கண்ணதாசனை பாட்டால் அடித்த நடிகர் எம்.ஜி.ஆர்!
'நாடோடி மன்னன்' திரைப்படத்திற்காகப் பாட்டுப் பதிவு நடந்தபோது ஒரு கலகலப்பான விஷயம் நடந்ததாகத் தகவல் கிடைத்துள்ளது. இந்தத் திரைப்படம் பற்றி கவியரசர் கண்ணதாசனிடம் பேசிய எம்.ஜி.ஆர், "என்னுடைய எல்லாச் சொத்தையும் விற்று இந்தத் திரைப்படத்தை எடுக்கிறேன். இது வெற்றிபெற்றால் நான் மன்னன், இல்லையென்றால் நாடோடி. ஆகையால், நாளைக்குக் காலை 9 மணிக்கு வந்துவிடுங்கள்" என்று சொல்லியிருக்கிறார். அதற்கு கண்ணதாசனும் சரியென்று சொல்லிட்டுப் போயிருக்கிறார்.
அடுத்த நாள் காலையில் 8 மணிக்கே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், எம்.ஜி.ஆர் உட்படப் பலரும் வந்திருந்த நிலையில், கண்ணதாசன் மட்டும் நண்பகல் 12.30 மணிக்கு வந்திருக்கிறார். "மன்னிச்சிடுங்க, கொஞ்சம் தாமதமாகிவிட்டது" என்று சொல்ல, "நீங்க வர்ற வரைக்கும் எதுக்கு நேரத்தை வீணடிக்கணும்" என்று கூறி பட்டுக்கோட்டையை ஒரு பாட்டு எழுதச் சொல்லியிருந்தேன் என்று சொல்லி ஒரு காகிதத்தை கண்ணதாசன் கையில் கொடுத்திருக்கிறார் எம்.ஜி.ஆர். அந்தக் காகிதத்தில், "போர்ப்படையில் தூங்கியவன் வெற்றியை இழந்தான், உயர் பள்ளியில் தூங்கியவன் கல்வியை இழந்தான். ஒரு பொறுப்புள்ள மனிதனின் தூக்கத்தினால், பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா" என்று எழுதப்பட்டிருந்தது. இதைப் பார்த்த கண்ணதாசன், "நான் தாமதமாக வந்ததற்கு என்னை நாலு சாத்து சாத்தியிருக்கலாம். ஆனால், இப்படிப் பண்ணிட்டீங்களே, இனிமே என் வாழ்க்கையில் தாமதமாகவே வரமாட்டேன்" என்று சொல்லியிருக்கிறார்.
Nanthini


