TamilsGuide

சிவாஜிலிங்கத்தை சந்தித்த தேசிய மக்கள் சக்தியினர்

உடல்நலம் பாதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளருமான எம்.கே.சிவாஜிலிங்கத்தை

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்துள்ளனர்.

அதன்படி, இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு உடல் நலம் குன்றியிருக்கும் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இல்லத்திற்கு கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறியுள்ளனர்.

தனது சிகிச்சைக்காக சுமார் 80 இலட்ச ரூபாய் தேவைப்படுவதாக இதன்போது சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார். 

உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் பெருமளவான பொதுமக்கள் தனக்கு நிதியுதவிகளை வழங்கி வருவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
 

Leave a comment

Comment