வெள்ளை மாளிகை சோதனைச் சாவடி அதிகாரிகளை நோக்கி துப்பாக்கிச்சூடு - மர்ம நபர் சுட்டுக்கொலை..
அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் 2-வது முறையாக தேர்தலில் வெற்றி பெற்று அந்நாட்டு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு அதிபராக இருந்து வருகிறார். தேர்தல் பிரசாரத்தின்போதும், அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும் அவரை கொல்வதற்கு சதி நடந்துள்ளது. அவரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் தப்பித்துள்ளார்.
இந்த நிலைியல் அமெரிக்க வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியை நோக்கி ஆயுதங்களுடன் வந்த நபரை, வெள்ளை மாளிகை பாதுகாவலர்கள் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.
சோதனைச் சாவடியை நெருங்கியதும், தனது பையில் இருந்து ஆயுதங்களை எடுத்து அந்த நபர் பாதுகாப்பு அதிகாரிகளை நோக்கி சுடத் தொடங்கியுள்ளார். இதனால், அதிகாரிகள் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதல் பலத்த காயம் அடைந்த அவரை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச்சூடு நடைபெற்றபோது, டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்ததாகவும், சண்டையில் அதிகாரிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ரகசிய பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 25-ந்தேதி டொனால்டு டிரம்பை கொல்ல முயற்சி நடந்தது. குற்றவாளியை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சரியாக ஒருமாதத்திற்குள் மீண்டும் ஒருமுறை டிரம்பை கொல்ல முயற்சி நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






















