TamilsGuide

கருப்பு படத்தை விஜயை மனதில் வைத்து எழுதினோம்... ஆனால்..- ஆர்.ஜே.பாலாஜி

ஆ.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘கருப்பு’. இப்படம் வெளியாகி ஒரு வாரமே ஆகும் நிலையில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று உலக அளவில் பாக்ஸ் ஆபிசில் வசூல் குவித்து வருகிறது. இப்படம் நடிகர் சூர்யாவின் ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளது என்றே கூறலாம்.

இந்த நிலையில், ‘கருப்பு’ பட கதையை விஜயை மனதில் வைத்தே எழுதியதாக ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளார். இதுதொடர்பாக சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆர்.ஜே.பாலாஜி கூறியதாவது:-

நானும் என் குழுவினரும் முதலமைச்சர் விஜயை (விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பு) மனதில் வைத்து இக்கதையை எழுதினோம். ஆரம்பத்தில், நான் இந்த கதையை எழுதி விஜய் சாரிடம் கூறினேன். பின்னர், சூர்யாவிடம் அதை சொல்லும் வாய்ப்பு கிடைத்தபோது, ​​நான் அந்த கதையை சூர்யா சாருக்காக மாற்றிவிட்டேன். ‘சிங்கம்’ படத்தில் சூர்யா சார் நடித்திருப்பதால் அவருடைய இமேஜுக்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் செய்தேன். அதை வேறு யாராலும் செய்ய முடியாது, இல்லையா? அவருக்காக அந்த தர்பூசணிக் காட்சியையும் சேர்த்தேன் என்றார். 
 

Leave a comment

Comment