• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நம்பிக்கை வைத்து தான் எல்லா படங்களையும் பண்றோம்- கருப்பு Success Meet-ல சூர்யா பேச்சு

சினிமா

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி உள்ள படம் ‘கருப்பு’. இப்படம் வெளியாகி ஒரு வாரமே ஆகும் நிலையில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று உலக அளவில் பாக்ஸ் ஆபிசில் வசூல் குவித்து வருகிறது. இப்படம் நடிகர் சூர்யாவின் ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளது என்றே கூறலாம்.

இந்த நிலையில், ‘கருப்பு’ படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பட குழுவினர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சூர்யா பேசியதாவது:-

'கருப்பு' குறித்த முடிவு 30 முதல் 45 நிமிடங்களுக்குள் எடுக்கப்பட்டது. சமீபகாலமாக, இவ்வளவு விரைவாக நான் எந்தவொரு படத்தையும் தேர்வு செய்ததே இல்லை. அன்றைக்கு எல்லாமே சரியாக இருந்த மாதிரி இருந்துச்சு. இது முழுக்க, முழுக்க ஆர்.ஜே.பாலாஜியின் விஷன் தான். அவர் சொல்லும் போதே தியேட்டரில் வேற மாதிரி இருக்கும் என்று நம்பிக்கை இருந்துச்சு.

நம்பிக்கை வைத்து தான் எல்லா படங்களையும் பண்றோம். படம் குறித்து முடிவு பண்ண முதல் நாளில் இருந்தே எல்லாமே சரியாப்போச்சு. அதற்கு முழு காரணம் டிரீம் வாரியர்ஸ் பிரகாஷ், பிரபு. எல்லா முடிவுகளையும் சரியா எடுத்ததுக்கும் சரியாக எடுக்க வைத்த கருப்பசாமிக்கும் தான் நான் நன்றி சொல்லணும். இது ஆசைப்பட்டது. ஆனா எதிர்பார்க்காத பெரிய வெற்றி கொடுத்த உங்கள் எல்லோருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அதேபோல், சமீபகாலத்தில் எனது படத்திற்கு இத்தகைய வரவேற்பு கிடைத்ததையும் நான் கண்டதில்லை. உலகம் முழுவதும் இதற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது. அனைவருக்கும் நன்றி என்று கூறினார். 
 

Leave a Reply